பிரதான உள்ளடக்கத்திற்குச் செல்

இப்பக்கத்தினைப் புதுப்பிக்க உதவுங்கள்

🌏

தற்போது இப்பக்கத்திற்கான புதிய பதிப்பு ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. சமீபத்திய பதிப்பினை மொழிபெயர்க்க உதவுங்கள்.

பக்கத்தை மொழிபெயர்
ஆங்கிலத்தில் காட்டு

இதில் நிரற்பிழை இல்லை!🐛

இன்னும் இந்தப் பக்கம் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தப் பக்கத்தை நாங்கள் ஆங்கிலத்திலேயே வைத்திருக்கக் காரணமுள்ளது.

தொடங்குக

எத்தேரியம் உலகத்திற்கான உங்களது நுழைவாயில் nexus.org ஆகும். புதிய தொழில்நுட்பமாகிய இது தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கும். அதனால் ஒரு வழிகாட்டியின் உதவி உங்களுக்கு தேவைப்படும். இதைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்துகொள்ள, இவற்றைச் செய்யுங்கள்.
Learn More
கணினியில் பணிபுரியும் நபரின் படம்.

எத்தேரியம் என்றால் என்ன?

டிஜிட்டல் பணம், உலகளாவிய கொடுப்பனவுகள் மற்றும் செயலிகளுக்கான தொழில்நுட்பம் எத்தேரியம் ஆகும். வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்துடன், படைப்பாளிகள் ஆன்லைனில் தைரியமாகச் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளையும் இன்னும் பலவற்றையும் இந்தச் சமூகம் உருவாக்கியுள்ளது. நீங்கள் உலகில் எங்கிருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம், இது அனைவரும் அணுகக்கூடியது - இதற்கு இணையம் மட்டுமே இருந்தால் போதும்.
சந்தையை ஒரு நபர் உற்றுநோக்குவது போன்ற படம், அது எத்தேரியமைக் குறிக்கிறது.

நியாயமான நிதி அமைப்பு

பில்லியன் கணக்கான மக்களுக்கு இன்று வங்கிக் கணக்குகளைத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது, அத்துடன் கொடுப்பனவுகள் செய்வதற்கான வசதியும் பிறருக்கு முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எத்தேரியமின் பல்முனைப்படுத்தப்பட்ட நிதி (DeFi) அமைப்பு எப்போதும் முடங்காது அல்லது பயனர்கள் இடையே பாகுபாடு காட்டாது. உங்களிடம் இணைய இணைப்பு மட்டும் இருந்தால்போதும், உலகில் எங்கிருந்தும் நீங்கள் பணத்தை அனுப்பலாம், பெறலாம், கடன் வாங்கலாம், வட்டி சம்பாதிக்கலாம் மற்றும் நிதியை ஸ்ட்ரீம் செய்யலாம்.
ETH சின்னத்தைக் கைகள் வழங்குவது போன்ற படம்.
ஹோலோகிராம் வழியாக Eth லோகோ காட்டப்படுகிறது.

சொத்துக்களின் இணையம்

டிஜிட்டல் பணத்திற்காக மட்டும் எத்தேரியம் பயன்படுத்தப்படுவதில்லை. உங்களுக்குச் சொந்தமான எதையும் அதன் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தலாம், வர்த்தகம் செய்யலாம் மற்றும் நான்-ஃபஞ்சிபிள் டோக்கன்களாக (NFTகள்) பயன்படுத்தலாம். உங்கள் கலை படைப்புகளை டோக்கன்களாக மாற்றலாம், ஒவ்வொரு முறை அது மறுவிற்பனை செய்யப்படும்போதும் தானாகவே அதற்கான உரிமைத் தொகையைப் பெறலாம். அல்லது உங்களுக்குச் சொந்தமான ஏதாவது ஒன்றை வைத்து கடன் பெற டோக்கனைப் பயன்படுத்தலாம். டோக்கன்கள் மூலம் எண்ணற்றவற்றை நாம் செய்துகொண்டே போகலாம்.

திறந்த இணையம்

இன்று, 'இலவச' இணையச் சேவைகளுக்கான அணுகலைப் பெறுவதற்காக நமது தனிப்பட்ட தரவுகள்மீது நமக்கு இருக்கும் கட்டுப்பாட்டை நாம் விட்டுத் தருகிறோம். எத்தேரியம் சேவைகள் இயல்பாகவே பொதுவானவை - உங்களிடம் ஒரு பணப்பை மட்டுமே இருந்தால்போதும். இவை இலவசமானவை மற்றும் அமைப்பதற்கு எளிதானவை, உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியவை, மேலும் எந்தத் தனிப்பட்ட தகவலும் இல்லாமல் செயல்படக்கூடியவை.
எத்தேரியம் படிகங்களால் இயக்கு சக்தி அளிக்கப்பட்டு எதிர்காலத்தில் இருக்கக்கூடிய ஒரு கணிணி அமைப்பின் படம்.

nexus.org ஐப் பற்றித் தெரிந்துகொள்க

எத்தேரியம் மேம்படுத்தப்பட்ட பிறகு அதிகரித்த ஆற்றலுடன் இருப்பதைக் குறிப்பதற்கு உள்ள விண்கலத்தின் படம்.

மேம்பாடுகள் குறித்து இன்னும் தெரிந்துகொள்க

அடுத்த நிலைக்குச் செல்லக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் நெட்வொர்க்கை மாற்றுவதற்கென ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட மேம்பாட்டு நிரல்கள் எத்தேரியம் தொழில்நுட்பத் திட்டத்தில் உள்ளன.

எதிர்கால கணினி/சாதனத்தின் படம்.

நிறுவனத்திற்கான எத்தேரியம்

வியாபாரம் செய்வதற்கான புதிய மாதிரிகளை எத்தேரியம் எப்படி உருவாக்குகிறது, உங்கள் செலவுகளை எப்படி குறைக்கிறது மற்றும் வருங்காலத்தில் உங்கள் வியாபாரம் சிக்கல் இன்றிச் செயல்பட எப்படி வழிவகுக்கிறது என்று தெரிந்துகொள்க.

கட்டுமான குழு ஒன்று சேர்ந்து வேலை செய்வது போன்ற படம்.

எத்தேரியம் சமூகம்

எத்தேரியம் என்பது சமூகத்தைப் பற்றியது. இது பல்வேறு சூழல்களைச் சேர்ந்த வெவ்வேறு ஆர்வங்களைக் கொண்டவர்களால் ஆனது. இதில் நீங்களும் எவ்வாறு இணையலாம் என்பதைக் காணுங்கள்.

use-Nexus

  • find-nexus
  • 2ம் அடுக்கு

கற்றுக்கொள்க

உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்)

நிறுவனம்

nexus.org பற்றிய தகவல்கள்